முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள facebook, hacking!!

சாதாரணமாய், என் லஞ்ச் கேங்கு நண்பர்கள் என்னிடம், உங்க வலைப்பதிவில் எப்பப்பாரு கார்த்திக் இதை செய்தான், அதை சொன்னான் என்று தான் இருக்கிறது என்பார்கள், ஆனால் சிறிது நாட்களாய், விக்னேஷின் ஜகதளப் ப்ரதாபங்கள் தான் இடம் பெறுகின்றன….

நேற்று, பள்ளியிலிருந்து வந்த குழந்தைகள், மாலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு ப்ளாட்டிலுள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாடச் சென்றனர்.  நான், காய்கனி அங்காடிக்கு செல்ல முடிவெடுத்து, காரில் பயணமானேன்.  அனைத்தையும் வாங்கிக் கொண்டு திரும்புகையில், ரெண்டு மூணு  போன் கால்கள். அனைத்துமே, விக்னேஷின் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள். திரும்பத் திரும்ப, நான் வெளியில் இருக்கிறேன், வீட்டிற்குப் போய், அவனை உனக்கு மீண்டும் போன் செய்யச் சொல்கிறேன், என்று கூறிய நான், கடைசியாய் செய்த பையனிடம், “என்ன விஷயம்?” என்று வினவினேன்.  அவன், “விக்னேஷிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்” என்றான் அசராமல்.  சரி, இதற்கு மேல் கேட்டால், நம் மானம் என்னாவது என்று எண்ணி, வீட்டிற்குள் சென்றவுடன், விக்னேஷிடம், “என்னடா, உனக்கு இன்னிக்கு போன் மேல போன் வரது.  என்ன விஷயம்?” என்றேன்.  அதற்கு அவன், “ஒண்ணும் பெரிய விஷயமில்லை மா, அந்த பசங்களுக்ககெல்லாம், Facebookல அக்கவுண்ட் ஓபன் பண்ணணுமாம்.  அவர்களுக்கு சில doubts இருப்பதால், எனக்கு போன் செய்திருப்பார்கள்” என்றான் சர்வ சாதாரணமாய்!!

“டேய்! உனக்கே நான் Facebookல அக்கவுண்ட் ஓபன் பண்ண விடலை, அப்படி இருக்க, இது என்னடா புதுக் கூத்து!! என்றேன். அதற்கு, “அம்மா, நான் ஏற்கனவே, உன் ஆபிஸ்ல இருக்கற என் ப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு ஓபன் பண்ணிட்டேன்”. மேலும், தொடர்ந்து, “அடுத்து, நான், வெப் சைட்களை எப்படி ஹாக்(hack)  செய்வது என்றும் கற்றுக் கொண்டுவிட்டேன். இன்னும் செயல் முறைப் படுத்தவில்லை, இந்த சனிக்கிழமை உங்க ஆபிஸ் வந்து சில நண்பர்களிடம் கலந்தாலோசித்த பிறகு செய்யப் போகிறேன்!!” என்றான்.

அவனது, வேகம் என்னை பயப்பட வைக்கிறது.!!!

Advertisements