முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள facebook, hacking!!

சாதாரணமாய், என் லஞ்ச் கேங்கு நண்பர்கள் என்னிடம், உங்க வலைப்பதிவில் எப்பப்பாரு கார்த்திக் இதை செய்தான், அதை சொன்னான் என்று தான் இருக்கிறது என்பார்கள், ஆனால் சிறிது நாட்களாய், விக்னேஷின் ஜகதளப் ப்ரதாபங்கள் தான் இடம் பெறுகின்றன….

நேற்று, பள்ளியிலிருந்து வந்த குழந்தைகள், மாலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு ப்ளாட்டிலுள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாடச் சென்றனர்.  நான், காய்கனி அங்காடிக்கு செல்ல முடிவெடுத்து, காரில் பயணமானேன்.  அனைத்தையும் வாங்கிக் கொண்டு திரும்புகையில், ரெண்டு மூணு  போன் கால்கள். அனைத்துமே, விக்னேஷின் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள். திரும்பத் திரும்ப, நான் வெளியில் இருக்கிறேன், வீட்டிற்குப் போய், அவனை உனக்கு மீண்டும் போன் செய்யச் சொல்கிறேன், என்று கூறிய நான், கடைசியாய் செய்த பையனிடம், “என்ன விஷயம்?” என்று வினவினேன்.  அவன், “விக்னேஷிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்” என்றான் அசராமல்.  சரி, இதற்கு மேல் கேட்டால், நம் மானம் என்னாவது என்று எண்ணி, வீட்டிற்குள் சென்றவுடன், விக்னேஷிடம், “என்னடா, உனக்கு இன்னிக்கு போன் மேல போன் வரது.  என்ன விஷயம்?” என்றேன்.  அதற்கு அவன், “ஒண்ணும் பெரிய விஷயமில்லை மா, அந்த பசங்களுக்ககெல்லாம், Facebookல அக்கவுண்ட் ஓபன் பண்ணணுமாம்.  அவர்களுக்கு சில doubts இருப்பதால், எனக்கு போன் செய்திருப்பார்கள்” என்றான் சர்வ சாதாரணமாய்!!

“டேய்! உனக்கே நான் Facebookல அக்கவுண்ட் ஓபன் பண்ண விடலை, அப்படி இருக்க, இது என்னடா புதுக் கூத்து!! என்றேன். அதற்கு, “அம்மா, நான் ஏற்கனவே, உன் ஆபிஸ்ல இருக்கற என் ப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு ஓபன் பண்ணிட்டேன்”. மேலும், தொடர்ந்து, “அடுத்து, நான், வெப் சைட்களை எப்படி ஹாக்(hack)  செய்வது என்றும் கற்றுக் கொண்டுவிட்டேன். இன்னும் செயல் முறைப் படுத்தவில்லை, இந்த சனிக்கிழமை உங்க ஆபிஸ் வந்து சில நண்பர்களிடம் கலந்தாலோசித்த பிறகு செய்யப் போகிறேன்!!” என்றான்.

அவனது, வேகம் என்னை பயப்பட வைக்கிறது.!!!

Advertisements

என் முதுமையிலும் “ஓர் கபடு வாராத நட்பு வேண்டும்!!!”

எத்தனையோ விஷயங்களில் என்னை ஏமாற்றிய இறைவன், நண்பர்கள் என்ற அந்த இனிமையான உறவுகள் மட்டும் ஏராளமாய் வாரி வழங்கியுள்ளார். சிறு வயது முதலிருந்தே, என்னைச் சுற்றிப் பல பேர் இருப்பார்கள்.  அவர்களுள் பலருடன் நான் எளிதில் தோழியாய்ப் பழகிவிடுவேன்.  பள்ளி நண்பர்கள், மகளிர் கல்லூரி நண்பர்கள், முதுநிலைக் கல்லூரி நண்பர்கள், பிறகு, வெவ்வேறு அலுவலகங்களில் வேலையின் போது கிடைத்த நண்பர்கள் என்று பலர் உள்ளனர்.  இன்றும், சில முக்கிய நாட்களின் போது, அவர்களின் குரலைக் கைப்பேசியிலோ, அல்லது, தொலைப்பேசியிலோ கேட்டவுடன் தான், அந்த நாளின் சுவை மனதில் இறங்குகிறது.

திருமணத்திற்குப் பிறகு, நாங்கள் அனைவருமே, நட்பினை மனதில் சுமந்தாலும், நேரில் காணவோ, அல்லது, அடிக்கடி பேசிக் கொள்ளவோ முடிவதில்லை.  அதிலும், குழந்தை என்று ஓர் இனிய புதிய உறவு வந்த உடனே, மற்ற அனைத்தும் பின் வாங்கி விடுகின்றன.

இன்று காலை, நான் வழக்கமாய்ச் செல்லும் ஆதம்பாக்கத்திலுள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்குச் சென்று திரும்பும் போது, இரு முதிய ஆண்கள், கோவிலின் வாயிலில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். ஒருவர் மற்றொருவரிடம், “எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு கண் காணாமல் ஓடிவிடலாம் போல உள்ளது…” என்றார்.  உடனே, கூட இருந்த நண்பர், “சரி சரி, முதலில் என்னோடு வா.  என் வீட்டிற்குச் செல்லலாம்.  அங்கே போய் ஆற அமர நிதானமாய் பேசலாம். பிறகு நீ ஒரு முடிவுக்கு வா. அவசரத்தில் ஏதும் முடிவு செய்யாதே!”என்றார்.  அதைக் கேட்டதும் எனக்கு மிக ஆறுதலாக இருந்தது. அந்த நண்பர் பதில் கூறிய விதம், மிக அழகாய் இருந்தது. அவர், புலம்புகிற நண்பருக்கு, ப்ரச்சனைக்கான தீர்வையும் வழங்கவில்லை, நண்பனின் துயரம்  தானே! தனக்கு என்ன வந்தது என்றும் விடவில்லை; ஆஹா!! துன்பம் வருகிற நேரத்தில், நமக்கு ஆறுதல் கொடுக்க இதைப் போல் உற்ற நண்பன்  கிடைத்தால் அதைவிட வேறு மகத்தான பேறு வேறில்லை…….

Unforgettable February’s of my life so far

When I look back, I think I have a few Feb’s which remain fresh in my mind….

  • Feb 1997 – No one among our friends gang would have believed that Srivi would get married so early.  B’coz, she was the most vibrant among us, and always wants to do the impossible sort of.. Her parents had two lovely daughters, and wanted them to excel in whichever field they wanted to.  Both sisters were doing computer courses, and Srivi used to tell us that “I want to see the millennium and only then get married” etc. But, her charming prince came on Jan 26th 1997, and this lady fell flat and got married within a fornight, and flew to America.
  • Feb 1999 – It was my turn, now as I got engaged to Vythi, in Nov. ’98, and our wedding was fixed for March 1999.  It was then that I realized that days are longer, and nights even worser, that I just wanted the calendar to run and stand at March 5th 1999.  We just had a month to go, before we lost our bachelor life, and become life-partners.  That year, Feb. 14th was my first Valentine’s Day, with Vythi, and we enjoyed each other’s company very much that day.  Vythi gifted me a cute little pair of earrings. There was lots of shopping going on, meeting friends and relatives to invite them for wedding and so on.
  • Feb 2000 – Viji got married on Feb.4th in the millennium year. Vignesh was hardly 2 months old, but that couldn’t prevent me from enjoying her wedding.  Not only Viji and Ram, we all were waiting for their wedding to happen, and we had a wonderful time.  My cousin, Kamakshi got engaged to Easwar at Trichy in Feb. 2000.  VIgnesh was too small to travel, but I insisted Vythi that I had to be there for her engagement somehow and Vythi took his car, Maruti 800, and we three went to Trichy to attend the function.  It was also a memorable February for my brother Raman, as he and Bhavani got engaged on Feb 14th 2000.

Then, many February’s passed by.  I am not able to remember any other milestone that I could write now. Again, to start with

  • Feb 2006 We decided Vignesh was ready for his Upanayanam and performed his Upanayanam on Feb 23rd.  My brother and his family had also come down from America for that.  It was a double treat as Varun, my brother’s son, was a year old and we did his Abdhapoorthi(First b’day celebration) on Feb 9th 2006.
  • Feb 2007 Viji and Ram had a double treat with the birth of their duo Rakshith and Rakshana, who are their double trouble right now.  But time will fly, and the two will grow into two beautiful souls, making their parents proud about their kids and their achievements.
  • Feb 2009 My cousin, Ramya, who is a real darling and pet in my mom’s side, got married on Feb 8th 2009.  We all had waited for that wonderful day, when she became officially Sriram’s wife.  Her wedding was filled with fun and happiness, and her dad, Kannan, took every pains to make it a grand success.  As we did for Vignesh, we planned for Karthik’s Upanayanam in the tamil month of Maasi, and thought it would fall in Feb 2009, but, it went a little further, and Karthik’s Upanayanam happened on the International Women’s day, March 8th.
  • Feb 2010 What else could be the reason for happiness, than the reunion of friends after a long time.  It has been 9 full years, since Srivi, came to India.  The last ocassion that she was here was in Jan 2001, for her sweet sister’s wedding.  That year, I had a small kid in Vignesh, and Viji too was newly married, and added to that Srivi was shuttling between Ambattur, her in-laws place and Chromepet, her parents’ place.  We couldn’t spend much time among ourselves.  But, this New Year 2010, when she called us to say that she is landing in India on Jan 31st, and will be here for another three weeks, our happiness had no bounds at  all.  The whole three weeks was a pleasure for all our friends.  We had our sweet time, and spent excellent days together, thanks to our respective husbands and kids.  Yesterday, being her last day in India, I didn’t want to miss the opportunity to meet her, and took Vignesh and Karthik along with me to her parents’ place at Chromepet.

Bon Voyage Srivi, Ravi, Anjali and Aakash.  We would love to see you all at the earliest possible moment…..

நாங்க யாரும் மாறவே இல்லை!!!

ஸ்ரீவித்யா தன் கணவர் ரவி, இரு குழந்தைகள் – அஞ்சலி, ஆகாஷ், மற்றும், ரவியின் பெற்றோருடன் கனடாவிலிருந்து பிப்ரவரி 1ம் தேதி வந்தாள். அவள் வந்ததிலிருந்தே, எனக்கும், விஜிக்கும், எப்போ அவளைப் பார்ப்போம், என்றிருந்தது.  பிறகு, இரு முறை  பார்த்தோம்.  எங்கள் கல்லூரித் தோழிகளிடம் ஸ்ரீவித்யா வந்திருப்பதாய் நான் கூறியதால், அவர்களும் ஸ்ரீவித்யாவைப் பார்க்க வேண்டும் என்று விழைந்ததால்,  ஸ்ப்லென்டிட் சவென் (Splendid Seven)  என்ற எங்கள் கல்லூரி காலத் தோழிகள் அனைவரும் நேற்று மதியம், தி.நகரில் உள்ள “மன்ஸுக்ஸ்” என்ற உணவகத்தில்,மதிய உணவிற்காக சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம்.  விஜியிடமும், இதைப் பற்றிக் கூறியிருந்ததால் அவளும் அலுவலகத்திலிருந்து, மதிய உணவு இடைவேளைக்காக, வந்து சேர்ந்தாள்.  ஏழு பேரில், நான்கு பேரால் மட்டுமே வர முடிந்தது.  நான், ஸ்ரீவி, லக்ஷ்மி மற்றும் சுமதி ஆகியோர், விஜியுடன் சேர்ந்து, ஐவரும் சுமார் ஒரு மணி நேரம் ஒன்றாகக் கழித்தோம்.  அனைவரின் வாழ்க்கையைப் பற்றி, எங்களின் கல்லூரி காலத்தைப் பற்றி, என்று பல விஷயங்கள் பேசினோம்.  மிக அருமையாய், அலுவலக நாளாக இருந்தும், நாங்கள் அவ்வாறு சந்தித்தது, எங்களனைவருக்கும், திருப்தியாய் இருந்தது.

அந்த சந்திப்பை முடித்து வெளியே வந்த போது, நானும், விஜியும் முடிவெடுத்தது, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சந்திக்க வேண்டும், அல்லது, சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று….