நாங்க யாரும் மாறவே இல்லை!!!

ஸ்ரீவித்யா தன் கணவர் ரவி, இரு குழந்தைகள் – அஞ்சலி, ஆகாஷ், மற்றும், ரவியின் பெற்றோருடன் கனடாவிலிருந்து பிப்ரவரி 1ம் தேதி வந்தாள். அவள் வந்ததிலிருந்தே, எனக்கும், விஜிக்கும், எப்போ அவளைப் பார்ப்போம், என்றிருந்தது.  பிறகு, இரு முறை  பார்த்தோம்.  எங்கள் கல்லூரித் தோழிகளிடம் ஸ்ரீவித்யா வந்திருப்பதாய் நான் கூறியதால், அவர்களும் ஸ்ரீவித்யாவைப் பார்க்க வேண்டும் என்று விழைந்ததால்,  ஸ்ப்லென்டிட் சவென் (Splendid Seven)  என்ற எங்கள் கல்லூரி காலத் தோழிகள் அனைவரும் நேற்று மதியம், தி.நகரில் உள்ள “மன்ஸுக்ஸ்” என்ற உணவகத்தில்,மதிய உணவிற்காக சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம்.  விஜியிடமும், இதைப் பற்றிக் கூறியிருந்ததால் அவளும் அலுவலகத்திலிருந்து, மதிய உணவு இடைவேளைக்காக, வந்து சேர்ந்தாள்.  ஏழு பேரில், நான்கு பேரால் மட்டுமே வர முடிந்தது.  நான், ஸ்ரீவி, லக்ஷ்மி மற்றும் சுமதி ஆகியோர், விஜியுடன் சேர்ந்து, ஐவரும் சுமார் ஒரு மணி நேரம் ஒன்றாகக் கழித்தோம்.  அனைவரின் வாழ்க்கையைப் பற்றி, எங்களின் கல்லூரி காலத்தைப் பற்றி, என்று பல விஷயங்கள் பேசினோம்.  மிக அருமையாய், அலுவலக நாளாக இருந்தும், நாங்கள் அவ்வாறு சந்தித்தது, எங்களனைவருக்கும், திருப்தியாய் இருந்தது.

அந்த சந்திப்பை முடித்து வெளியே வந்த போது, நானும், விஜியும் முடிவெடுத்தது, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சந்திக்க வேண்டும், அல்லது, சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று….

Advertisements