என்ன கொடுமைடா இது!!

டைட்டில் பயங்கர  ‘கிக்’கா இருக்குல்ல!! இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி என் பசங்க ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்ததும் நானும் வராத காரணத்தால் (உள்ளுக்குள்ள ஒரே குஷியாய் இருந்திருக்கும் போல!!) என் கைப்பேசியில் என்னை அழைத்தனர். சின்னவன் கார்த்திக் அவனது வழக்கமான பள்ளிப் புகார்களை வாசித்து முடித்த பின் நான் எப்போது வருவேன் என்று கேட்ட பிறகு தன் அருமை அண்ணனிடம் தொலைப்பேசியைக் கொடுத்தான். அண்ணன் தன் முறைக்கு தான் தன் வகுப்பில் கணிதத்தில் இரண்டாவது அதிக மதிப்பெண் என்றும் கூறினான்.  அதைக் கேட்டு கண்டிப்பாக நான் அவனைப் பாராட்டி இருக்க வேண்டும். அதிலும் நான் அவனோடு துளியும் உட்காரவில்லை அவன் பரிட்சைக்குத் தயார் செய்யும் போது.!! மேலும் என் தாய் தந்தையர் இருவருமே என்னையும் என் அண்ணனையும் ரொம்ப “டார்ச்சர்” செஞ்சதில்லை! என் தந்தை நாங்கள் கொண்டு வரும் விடைத்தாளை என்ன மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று கூட பார்க்காமல் கையொப்பமிடும் ரகம். அவருக்கு மகளாகப் பிறந்தும், நான் விக்னேஷிடம், “என்ன இருந்தாலும் ஒரு கணக்கு வாத்தியாருக்கு மகனாய்ப் பிறந்தும் நீ இப்படி முதல் மதிப்பெண் வாங்கத் தவறியிருக்கக் கூடாது” என்றேன். அவன் ஒரே போடாக, “அம்மா! நீ எழுதி முதல் மதிப்பெண் வாங்கவில்லை என்றால் அர்த்தம் இருக்கு! எனக்கு நான் வாங்கிய மார்க் போறும்” என்றதும் நான் ஆனேன் கப்சிப்.!!

Advertisements