“இந்த குளிரிலும் மழையிலும் ஸ்கூல் போகணுமா மா?”

சில வருடங்களாகவே, மனிதனின் இயல்பு மட்டும் மாறவில்லை. இயற்கையின் இயல்பும் தான்…ஐப்பசி மாதம் அடை மழை, மார்கழி மாதம் கடுங்குளிர் என்று தான் பார்த்துள்ளோம். அதிலும் சென்னையில், மழையும் அதிகம் இருக்காது, குளிர் வெடவெடக்கும் படியும் இருக்காது.  மிகக் கடும் வெயில், கடும் வெயில், வெயில், இது தான் சென்னை வெப்ப நிலை.  இந்த வருடம் மழை ரொம்ப நாள் ஆட்டம் காட்டிவிட்டது.  மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் டிசம்பர் மாதம் கூட பெய்கிறது.  குழந்தைகள் இருவரும், காலையில் எழுந்திருக்கும் போதே “இந்த குளிரிலும் மழையிலும் ஸ்கூல் போகணுமா மா?” என்று கேட்கின்றனர்…. ஆஹா, அருமையான யோசனை.  ஆனால் நடக்காதே! கிளம்புங்கடா ஸ்கூலுக்கு என்றேன்!! வருத்தத்துடன்….

Advertisements