ஊருக்குப் போயும் கரண்டி பிடிச்சேன்!!

சென்ற வலைப்பதிவிலிருந்து, நாங்கள் நால்வரும் கோடைக்கால விடுமுறைக்காக உத்தர்கண்ட் மாநிலத்திலுள்ள “பின்சார்” என்ற இடத்தில் க்ளப் மஹிந்தராவின்  ரிசார்ட்டில் தங்கியிருந்தோம் என்பதை அறிந்திருப்பீர்கள்.

விக்னேஷ் குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே நாங்கள், வெளியூரில் ரிசார்ட்டில் தங்க நேர்ந்தால், சமையலுக்குத் தேவையான பொருட்களை கொண்டு சென்றுவிடுவோம்.  முன்பெல்லாம், அந்த ரிசார்ட்களில் எலெக்டிரிக் அடுப்பும், சில முக்கியமான சமையல் பாத்திரங்களும் இருக்கும்.  இங்கிருந்தே, தோசை மாவு, அரிசி, கோதுமை மாவு, பருப்பு, புளி, சாம்பார் பொடி, ரசப் பொடி, கடுகு, தாளிக்கும் எண்ணெய், அப்பளம், என்று, யோசித்து, யோசித்து, நிறைய சாமான்களைத் தூக்கிச் செல்வேன்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு, கோவா சென்ற போது, அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது , தற்போது, வெறும் மைக்ரோ வேவ் அவென் மட்டுமே தருவார்கள் என்றும், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற பண்டங்களை செய்ய வாய்ப்பில்லை என்று. இருப்பினும், அடங்காமல், கிளம்பும் நாளன்று, ப்ரஸ்டிஜ் ஸ்மார்ட் கிச்சன் சென்று, “இன்டக்க்ஷன் அடுப்பும், அதற்குரிய பாத்திரங்களும் வாங்கினேன்.

அங்கு தங்கிய நாட்களில், கிட்டத் தட்ட அனைத்து நாட்களும், நாங்கள் எங்களுக்கு வேண்டிய பலவற்றை நாங்களே செய்து உண்டோம்.

பானை பிடித்தவள் பாக்கியசாலி!!

Leave a comment