ஏழு வயது குழந்தையின் (அ)நியாயமான கேள்வி – “எனக்கு எப்போ மா கல்யாண நாள் வரும்?”

என் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்குத் தெரியும், என் இளைய மகன் கார்த்திக் எவ்வளவு துறுதுறு என்று… இன்று எங்கள் திருமண நாள். கல்யாணமாகி 11 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இருவருமே நிறைய மாறியுள்ளோம்.  தலைப்பு திசை மாறுவதற்கு முன்னால், நான் மீண்டும் ஏன் இந்த வலைப் பதிவைப் பதிக்கிறேன் என்று காணலாம்.

நேற்று இரவு, படுக்கப் போகுமுன், என் கணவரை திருமண நாளிற்காக வாழ்த்திவிட்டு, அவரிடம் ஒரு வாழ்த்து அட்டையும், பெரிய பார்சல் ஒன்றும் கொடுத்தேன்.  அவருக்கோ அதனுள் என்ன இருக்கும் என்றறிய ஒரே ஆவல்.  நான் அதனை வாங்கச் சென்ற போது, குழந்தைகள் இருவரும் என்னுடன் வந்தனர் என்றாலும், கார்த்திக் அங்கே ஒரு “Play Station Video Game” பார்த்தவுடன், எங்களை மறந்து, ஏன் தன்னையே மறந்து, விளையாடிக் கொண்டிருந்தான்.  விக்னேஷ்க்குத் தெரியும், அது ஒரு ஏசர் (Acer Netbook) மடிக் கணினி. இரவு தன் அப்பா அந்த பரிசுப் பார்சலைத் திறக்கும் வரை ஒரே அமர்க்களம். இறுதியில், அது ஒரு கணிப் பொறி என்று கண்டவுடன், என்னிடம், “எனக்கும் கல்யாணமானா என் மனைவி இதெல்லாம் பரிசாகத் தருவாளா? என்றான்.  அப்போதைக்கு அழுகையை நிறுத்த வழி என்று எண்ணி, “தருவாள்!!” என்றேன்.  உடனே, எதிர்பாராத விதமாய் அவன், “எனக்கு எப்போ “Wedding Day” என்று கேட்கிறான்???

என்ன பதில் கூற??????????

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s