கெட்டது இராத் தூக்கம், IPL போட்டிகளால்!!

மார்ச் 12, 2010 வரை, தினமும் தூங்கச் செல்ல, என் இரு வாண்டுகளும், இரவு 10 அல்லது 11 மணியானாலும்,  ஏதாவது காரணம் தேடிக் கொண்டிடுப்பார்கள். சில sample காரணங்கள் : “பசிக்கிறது!!(சாப்பிட்டு சிறிது நேரமே ஆகியிருந்தாலும்!!); அல்லது “ஒன் பாத்ரூம்/டூ பாத்ரூம் (இதற்கு நாம் கண்டிப்பாக எதிர்ப்பு சொல்ல முடியாதே!!) ; கொஞ்ச நேரம் ஏதாவது கதை சொல்லுப்பா, அல்லது சொல்லுமா; இப்படி பல.

இப்போதோ, தினமும் IPL போட்டியைச் சாக்காக வைத்து, தூங்க 12 மணியாக்கிவிடுகிறார்கள்.  காலை என்னாலயே 5:30 மணிக்கு எழ கஷ்டமாக இருக்கிறது. விக்னேஷை 6 மணிக்கும், கார்த்திக்கை 7 மணிக்கும் எழுப்புவதற்குள், என் ப்ராணனில் பாதி செலவழிந்து விடுகிறது.  ஸ்கூல் விடுமுறை தொடங்க இன்னும் பல நாட்கள் இருப்பதால், எனது இந்த புதிய கவலை மேலும் சில நாட்கள் தொடரும்.

Advertisements

சொக்க வைக்கும் சாய்ராமின் குரல்!!

சென்ற வாரத்தில் என் கணவர் ஹோசூர் என்ற இடத்திற்கு அலுவலக வேலையாய் சென்றிருந்ததால், தினமும் இரவு வேளைகளில் குழந்தைகள் தூங்கிய பிறகு, அவர் என்னைக் கூப்பிடும் வரை ஒரே கொண்டாட்டம் தான்.  வெகு நாட்களாய் கேட்க நினைத்திருந்த கர்நாடக இசைப் பாடல்களை, கூகிளிலும், யூடியூப்பிலும்  தேடிப் பிடித்து, என் புதிய கைப்பேசியில், பதிவு செய்து கொண்டிருந்தேன். அப்போது கண்டெடுத்த முத்து இது:

சென்ற வருடம், ஜெயா டி.வியில் மார்கழி மஹா உத்சவத்தில் பாடியது.

இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால், யசோதை தன் மகனான, க்ருஷ்ணனிடம், “மாடு மேய்க்கச் செல்ல வேண்டாம்” என்று அதற்குப் பல காரணங்களையும் கூற, பகவானின் அவதாரமான க்ருஷ்ணர் தாயிடம், மிகவும் சமயோசிதமாகக் கூறும் சுவையான பதில்களும் தான்.  பாடல் வரிகளே மிக அற்புதமாக இருக்க, அதற்கு மேலும் அழகூட்டுவது போல அருணா சாய்ராமின் குரலும், முக பாவங்களும், சிறந்த பக்கவாத்தியக் காரர்களும் சேர்ந்துள்ளனர்.

விக்கிபீடியா! இந்தா, பிடியா என் பாராட்டை!!!……..

நான் ஆரம்பித்து முடிக்காத சில வேலைகளுள், முதன்மையான ஒன்று, M.B.A. டிகிரி வாங்க ஆசைப்பட்டு, இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில்(IGNOU) சேர்ந்தது.  21 தியரி(theory) பேப்பர்களை வெற்றியுடன் முடித்த நான், ஒரே ஒரு ப்ராஜக்ட் வொர்க்குக்காக, 2 வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறேன்.  நேற்று, அது சம்பந்தமாக, ஒரு விரியுரையாளரை சந்திக்கச் செல்ல முடிவெடுத்து, மாலை பள்ளி முடிந்தவுடன், இரு குழந்தைகளுக்கும், pizza வாங்கிக் கொடுத்து, வீட்டில் கீழே விளையாடுமாறு கூறிவிட்டு, சென்றேன்.

திரும்பி வந்தால், முதல் நியூஸ், “கார்த்திக் கண்ணாமூச்சி விளையாடும் போது, ஒரு அப்போது தான் நிறுத்தப்பட்ட பைக்கின் சைலன்சரில் சுட்டுக் கொண்டான்” என்று.

பர்னால் தடவப் பட்ட இடத்தைக் கண்காணித்தேன். சற்றே கொப்பளமாகியிருந்தது. உடனே, விக்னேஷ் என்னிடம், “அம்மா! ஏன்  இரத்தம் வரவில்லை?” என்றான்; நான் “தோலின் மேல் பகுதியில் தான் சூடு பட்டுள்ளது. அதற்கடுத்த உட்பகுதியில், பட்டால் தான் இரத்தம் எல்லாம் வரும்” என்றேன். விடவில்லை கார்த்திக். “அப்போ, சதை(flesh)யின் கீழ் இரத்தம் உள்ளதா? அல்லது தசை(muscle)யின் கீழ் உள்ளதா?” என்று தன் சந்தேகத்தை எழுப்பினான். எனக்கோ, மணி இரவு 7:30. இன்னும் குக்கர் கூட வைத்த பாடில்லை. இதில் இவர்களின் சந்தேகம் வேறா! என்றிருந்தது. நான் அவர்களைப் பார்த்த பார்வையிலேயே, விக்னேஷ், “சரி சரி, நீ சொல்ல வருவது புரிகிறது. எப்படியும், நானும், உங்கள் சந்தேகத்தை கூகிள், அல்லது விக்கிபீடியா இவற்றில் தான் தேடப் போகிறேன், அதை நீங்களே செய்யக் கூடாதா!!” என்று கூற, எனக்கு மிகுந்த relief!!!

யோசிச்சுப் பார்த்தால், computer, google, wikipedia இவை இல்லாத உலகில் எப்படி வாழ்வது?? என்று மிகுந்த மலைப்பாக இருக்கிறது. வாழ்க கூகிள், வளர்க விக்கிபீடியா என்று விடை பெறுகிறேன்!!!

Airtel Super Singer-ல் பாடும் அல்கா ஒரு குட்டி சின்னக் குயில் “சித்ரா” தான்!!

இன்றும் நாளையும் Airtel Super Singer-ல்  “சிறுமியர்களுக்கான ஒரு லட்சம் வெல்லப் போவது யார்?” என்ற போட்டி. இன்று பாடிய நித்யஸ்ரீ, ஸ்ரீநிஷா, அல்கா போன்றோர், அசத்திவிட்டனர்.  அனைவருமே நன்றாகப் பாடி, இரு நடுவர்களையும் திக்குமுக்காடச் செய்துவிட்டனர்.

அதிலும், அந்த அல்கா என்ற சிறுமி, மிக மிக அழகாய்ப் பாடினார்.  அவர் இன்று எடுத்துக் கொண்ட மூன்று பாடல்களுமே சின்னக் குயில் சித்ரா பாடிய பிரபலமான பாடல்கள். அல்காவின் குரல் அந்த ஒரிஜினல் குரலைப் போலவே இருந்தது.

We haven’t been apart for such a long time dear!! Waiting for you to come

It has been really, really a long time, since Chandar(officially Vythi, my better half) and me have been apart.  It was way back in January, when he had gone to Bangalore,  immediately after we all, as a family had been to Bangalore to attend my cousin Suresh’s wedding.  After that, we had our own sweet time together, ((although, in between we might have had a few rough times, that lasted a few moments only) for the whole of February.  Then, it was March, and we had our wedding day, which brought us even more memories of our initial meetings, and the immediate days/months after wedding.  We relived those moments.  Suddenly, two days before our wedding day, Vythi told me that he might need to go to Hosur, on an official visit, and he is trying to postpone it, so that he will be there with us, on Friday, 5th March 2010, our wedding anniversary, and then push off to Hosur on Sunday.  As planned, he left to Bangalore, on Sunday, stating that it might be minimum Wednesday, max. Friday for him to return.

I was very much hopeful that, Vythi would make to Chennai by today morning, as he will definitely finish his work, to come back to home, sweet home!! But, alas, to my utter disappointment, he just called a few minutes back, and told that he can come only on Friday morning.

It is really tough to be without somebody, whom you get used to being with, even it is for a day or night. Longing to have you, Vythi,  at Chennai, near me…Please come soon.

Roshan vs Srikanth in Today’s Airtel Super Singer Junior II

Vijay TV’s Airtel Super Singer Junior – II, a music show deciding the special voice among thousands of young boys and girls  of Tamil Nadu, has reached a very interesting stage.  All initial elimination rounds are over, and we have now, 10 deserving contestants who are fighting each other with a sportive spirit, (not common for their age!!) to win the title.  This week, the first two days, the boys of the show were competing against each other, to select top two among the boys, and a rapid fire round for the two kids, to decide, who will win a prize money of Rs. 1,00,000/-.   Karthik was hooked to see to it that Srikanth will win the prize, whereas myself and Vignesh, were both thinking that Roshan will win.  They both topped the boys list, with equal scores, and went to the rapid fire round.  In that round, each player had to sing for a minute, followed by the other, for the next one minute, and then the first will do his next song, and like that, each player were supposed to sing three songs.

Both the kids, did a great job, but I was confident that Roshan would win, as he was seen as the clear winner.  But, the judges choices were different, and Srikanth was ahead of Roshan by 1 point, and hence won this week’s boy’s award for a lakh rupees.

better luck Roshan,  next time!!!

“அப்பாடா, இனி இந்த அண்ணாவோட அலட்டல் எங்கிட்ட செல்லாது!!!”

கடந்த பத்து பதினைந்து நாட்களாக விக்னேஷின் அலட்டல் எனக்கே சற்று “ஓவராக” தான் இருந்தது.  விஷயம் இது தான் – விக்னேஷின் போரூர் பள்ளியில் ஒரு வென்டிங் மெஷின் வைத்திருக்கின்றனர். அதில், நம் விருப்பத்திற்கேற்ப “பால், சாக்லேட் மில்க் அல்லது கப் நூடுல்ஸ்” இவற்றை பணம் கொடுத்துப் பெறலாம்.  குழந்தைகள் காலங் கார்த்தாலயே, எழுந்ததும் எழாமலும் பள்ளிக்குச் சென்றுவிடுவதால், மிகுந்த நேரம் பசியுடன் உள்ளனர், அல்லது, அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்கின்றனர். இரு வாரமாக, தினமும், மாலை விக்னேஷ் என்னிடமும் கார்த்திக்கிடமும் ஒரே அலட்டல் “இன்று நூடுல்ஸ் டிரை பண்ணினோம், இன்று பால் குடித்தேன்”, என்று.

இன்று அவனின் அலட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாற் போல், கார்த்திக்கின் பள்ளியிலும் அதே வென்டிங் மெஷினை வைத்திருக்கின்றனர்.  அவனும் குஷியாக என்னிடம் இன்று மாலை, பள்ளி விட்டதும், “அம்மா, எங்க ஸ்கூல்லயும், இன்னைக்கு காபி, நூடுல்ஸ், ஆகியவைக்கான மெஷின் வைச்சிருக்காங்க, எனக்கும் வாங்கிக் கொடு” என்று.  ஏன் இந்த அவசரம் என்று கேட்டால், “அண்ணா மட்டும் தான் அலட்டிப்பானா?? நானும் காட்டறேன், என் பவரை!!” என்றான் கார்த்திக்.

நல்ல வேளை, நான் தப்பித்தேன், அவனிடமிருந்து!!!