கார்த்திக் இன்று “வண்டலூர் ஜூ”க்கு school visit!!

நேற்று மாலை, நான் பிள்ளைகள் இருவரையும் பள்ளியில் அழைக்கச் சென்ற போது, கார்த்திக்கின் முகத்தில், 100 வாட் பல்பு மின்னியது. விஷயம் இது தான் – “நாளை என் க்ளாஸில் எல்லாரையும் ஸ்கூல் டிரிப், வண்டலூர் ஜூ அழைத்துப் போகப் போகிறார்கள்” என்றான். மறக்காமல் அண்ணா field trip போன போது, சரவண பவனில் வாங்கி கொடுத்தாயே! potato chips, அதே மாதிரி பெரிய பாக்கெட் சிப்ஸ் எனக்கும் வேணும். என் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லியிருக்கேன், நான் potato chips கொண்டு வருவேன் என்று” என்றான். ஞாபக மறதியில் நேற்று வீட்டிற்கு வந்ததில் extra திட்டு வேறு!! இன்று காலை, வழக்கமாய்ப் படுக்கையை விட்டு எழுந்திருக்கத் தகறாறு செய்யும் கார்த்திக், கூப்பிட்ட குரலிலேயே எழ, எனக்கு, தினமும் ஏதாவது, school trip இருக்கக் கூடாதா!! என்றிருந்தது. எல்லா வேலைகளையும் செவ்வனே செய்து, நல்ல பிள்ளையை போல் கிளம்பினான்.  ஸ்கூல் செல்லும் வழியில் மறக்காமல் சரவண பவனில் நின்று, potato chips வாங்கிய பிறகே நாங்கள் பள்ளி சென்றோம்.

மாலை, நான் பள்ளி சென்றதும், முதலில் அவன் வகுப்பாசிரியைப் பார்த்தேன். அவர் என்னிடம், “கார்த்திக், இன்று மிக அற்புதமாக நடந்து கொண்டான்” என்றார்.  சற்று நேரத்தில் கார்த்திக் என்னைக் கண்டு ஓடி வந்தான்.  நான் ரொம்ப enjoy பண்ணினேன் அம்மா!! என்றான்.

உடனே, விக்னேஷ், “அம்மா, அவன் கூட்டத்தைப் பார்த்த உடனே, அப்படித் தான் இருந்திருக்கும்” என்றான்.  வேண்டாத வம்பு…அடிதடியில் முடிந்தது.!!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s