கீரைக்காரம்மாவிடம் “க்ளோபல் வார்மிங்(Global warming)”

கார்த்திக்கின் பள்ளியில், கடந்த வாரம்,   “க்ளோபல் வார்மிங்(Global warming)” என்ற தலைப்பில் அவனது வகுப்பாசிரியை குழந்தைகளுக்கு எளிதில் புரியக்கூடிய விதத்தில் பாடம் நடத்தியுள்ளார்.  அன்று மாலை பள்ளி விட்டதுமே, கார்த்திக், என்னிடமும், தன் அண்ணனிடமும், அந்த தலைப்பைப் பற்றியே பேச்சு. “Ozone layer”, “Ozone layer depletion”, “Air Pollution” etc. etc., என்று ஒரே புலம்பல்.  வழக்கம் போல், அவர்களின், அன்றைய மாலை வகுப்புகளை முடித்துக் கொண்ட உடனே, நான் இரு குழந்தைகளுடன் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, இறுதியில், கீரை விற்கும் பெண்மணியிடம் சென்றேன்.  அவரிடம், ஒரு கீரைக் கட்டை விலை பேசி, சில்லரை கொடுத்து, வாங்கிக் கொண்டு போலாம்” என்று பார்த்தால், விதி வேறு விதமாய் வேலை செய்தது. ப்ளாஸ்டிக் கவரில், கீரையைக் கொடுத்த பெண்ணிடம், கார்த்திக் சற்றே அதட்டும் குரலில், “என்னம்மா இது!!! இப்படி ப்ளாஸ்டிக் கவரில் கீரையைத் தருகிறீர்கள்! நாம் ஒவ்வொருவரும், இப்படி ஆளாளுக்கு, சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தினால், ஓசோன் லேயர் என்ற பகுதி அதிவேகமாக அழிந்து வருகிறது.இப்படியே சென்றால், இன்னும் 20 வருடங்களில், நம்மைக் காக்கின்ற ஓசோன் மண்டலம் அழிந்துவிடும்.” என்றான். அதற்கு அந்த பெண்மணி,”நீ சொல்வது ஒன்றும் விளங்கவில்லையப்பா!!, உனக்கு வேண்டுமானால், நீ வீட்டிலுருந்து வரும் போதே துணிப்பை கொண்டு வா” என்றாள். கார்த்திக் சளைக்காமல், “உங்களிடம் தான் அந்த சாக்கு பை இருக்கே! அதிலே போட்டு குடுங்க…” என்றான்.  இறுதியில், நான் அன்று, கீரைக்கட்டை கையிலேயே ஏந்தி வீடு திரும்பினேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s