திருமணமான புதிதில் செய்த ரவா உப்புமா, சாரி ரவா கஞ்சி!!

அப்பொழுது தான் எனக்குத் திருமணமான புதிது.  சில நாட்களே ஆகியிருந்ததால், என் மாமியாரே, முக்கால்வாசி நேரம் சமையல் செய்தார்கள்.  அவர்கள் வீட்டில் தினமும், காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலை மீண்டும் ஏதேனும் ஒரு சிற்றுண்டி, இரவு  சாப்பாடு என்று செய்வர்.  ஒரு நாள் அதிகாலை, என் கணவரின் சித்தப்பா மதுரையிலிருந்து இரயிலில் வந்து இறங்கினார்.  என் மாமியாரிடம், “புது மருமகள் கைப் பக்குவம் எப்படி உள்ளது? எப்படி சமைக்கிறாள்?” என்று வினவினார். அவர்களும் பதிலுக்கு, “நன்றாகச் செய்கிறாள்” என்று கூறி, என்னிடம் “அனைவருக்கும் ஆகிறாற் போல், ரவா உப்புமா செய்துவிடு. ” என்றார். எனக்குத் தெரியும், வீட்டில் இட்லி/தோசை மாவு அன்று பார்த்து சதி செய்வது போல இல்லை என்று. திருமணத்திற்கு முன்பே, நான் என் பிறந்த வீட்டில், சமையலறையில், பல்வேறு வகைகள் செய்திருந்தாலும், ரவா உப்புமா செய்து பழகியிருக்கவில்லை.  என் பெரிய அத்தை, சமையல் கலையில் கைதேர்ந்த வல்லுனர்.  அவரிடம், எப்பொழுதோ ரவா உப்புமாவின் செய்முறையைக் கேட்ட பொழுது, “அதற்குப் பெயரே திடீர் உப்புமா, அல்லது நாதஸ்வரக் கலைஞர் உப்புமா, மிகவும் எளிது.” என்றார்.

என் போறாக் காலத்தை நினைத்து நொந்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை நறுக்கிக் கொண்டேன்.  வாணலியை கேஸில் வைத்து, பற்ற வைத்தேன்.  முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கி, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கியவற்றை எண்ணெயில் போட்டேன்.  பிறகு, வேண்டிய அளவு தண்ணீர் வைத்து, அது கொதித்தவுடன், சிறிது சிறிதாக ரவையை சேர்த்தேன். சற்று நேரம் அக்கலவையை அப்படியே வைத்திருந்தேன் எனில், உப்புமா ஒழுங்காக ஆகியிருக்கும்.  ஆனால், நான் ரவை சரியாக வெந்திருக்குமோ இல்லயோ என்று, மேலும் மேலும் தண்ணீர் சேர்த்தேன்.  அதிகம் தண்ணீர் சேர்த்ததால் ரவா உப்புமா, ரவா கஞ்சி! என்பது போல் வெளி வந்தது.  முதல் பலி என் சின்ன மாமனார்.  அவர் உண்டுவிட்டு, மிகவும் கஷ்டப்பட்டு, “நன்றாய் இருக்கு!” என்றார். அனைவரும் உண்ட பிறகு தான், நான் சாப்பிட அமர்ந்தேன். வாயில் வைக்க கொஞ்சம் சிரமமாய் இருந்த உப்புமாவை உண்ட அனைத்து மனிதர்களுக்கும் என் மனமார்ந்த வருத்தங்கள்!!!.

அதன் பிறகு, எப்பொழுது ரவா உப்புமா செய்தாலும், பழைய ஞாபகம் என்னை அச்சுறுத்தும்!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s