திருமணத்திற்குப் பிறகு நாங்கள் பார்த்த முதல் திரைப்படம்!!

நான் முன்பு கூறியிருந்தது போல், எங்கள் திருமணம், மார்ச் 5, 1999ல் விமர்சையாக நடந்தேறியது.  உடனேயே நான் கருத்தரித்ததால், டாக்டரிடம் செல்வது, கருவுற்ற காலத்தில் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி போன்ற உடல் உபாதைகள் இருந்ததால், நாங்கள் திரைப்படம் செல்வது குறித்து யோசனை கூட செய்யவில்லை. பிறகு, டிசம்பர் 7, 1999, என் மூத்த மகன், விக்னேஷ் பிறந்தான்.  சிறு பிள்ளையை வைத்துக்கொண்டு படம் பார்ப்பது கடினம் என்று அவனுக்கு இரண்டு அல்லது மூன்று வயதான பின் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இருந்தோம்.  ஆனால், விதி வேறு விதமாய் நினைத்தது போலும்.  2002 ஜுன் 18ம் தேதி, என் இளைய மகன் கார்த்திக் பிறந்தான்.  மீண்டும், முதலில் நினைத்தது போலவே இவனுக்கும் சிறிது வயதாகட்டும் என்றிருந்தோம்.  ஒரு வழியாய், 2005ம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வெளியான “சந்திரமுகி” திரைப்படம் வெளியானது.  தொலைக்காட்சி, நாளேடுகள், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருமே இத்திரைப்படத்தைப் பற்றி நல்ல கருத்தை தெரிவித்ததால், எங்கள் படம் பார்க்கும் வெகு நாளைய ஆவல் துளிர்விட்டது. நான், என் கணவர், எங்கள் இரு குழந்தைகள், என் கணவரின் பெற்றோர் என அனைவரும், அசோக் பில்லரில் உள்ள “உதயம்” திரையரங்கில் காணச் சென்றோம்.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களிற்குப் பிறகு திரையரங்கில் படம் பார்ப்பதால், எங்களுக்கு, பெரிய திரையும், மிகுந்த சத்தமும் புதிதாய் இருந்தது.  சிறுவர்கள் இருவரும் இந்த சூழ்நிலைக்குப் புதிது ஆகையால், மனதிற்குள் நானும் என் கணவரும், எந்த நிமிடமும் கிளம்ப வேண்டிய நிலைக்கு மனதளவில் தயாராய் இருந்தோம்.  பல காட்சிகளின் போது, நாங்கள் அவர்களின், கண்களை மூடிக் கொள்ளச் செய்தோம்.  ஆக, வெற்றிகரமாய், திருமணமாகி ஆறு வருடங்கள் உருண்டோடிய பிறகு, குடும்ப சகிதமாய், நாங்கள் கண்டு ரசித்த முதல் திரைப்படம் “சந்திரமுகி”.

பி.கு. : இன்று, என் குழந்தைகளை திரைப்படம் பார்க்காமல் இருக்கச் செய்ய முடிவதில்லை. “சிவாஜி”, “தசாவதாரம்”, “வரலாறு”, “பில்லா”, “அயன்”, “கந்தசாமி” என இவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s