டேய் அண்ணா!!!

2005.  அப்போது தான், கார்த்திக் ப்ரி-கேஜி சேர்ந்திருந்த சமயம்.  கார்த்திக், ஒரு வயது, அல்லது ஒன்றரை வயது வாக்கில் பேசத் தொடங்கியபோதே, நாங்கள், அவன் விக்னேஷை  “அண்ணா” என்றுதான் கூப்பிடுமாறு பணித்திருந்தோம்.  ஆகையால், கார்த்திக் தன் அண்ணனை “அண்ணா” என்று அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.  ஆனால், என் அம்மா வழி சொந்தங்களான என் பெரியம்மாக்களின் பேத்தி, பேரன்கள் (மூவருக்கும் 20 வயதிற்கும் மேலிருக்கும்), ஆகியோர்களை நான் பேர் சொல்லி அழைக்கும் வழக்கம் கொண்டிருந்ததால், என் பிள்ளைகளும் அவர்களை “ரம்யா”, “மணி”, “அஷ்வந்த்” என்றே அழைத்தனர். ரம்யாவைக் காண செல்லும்போதெல்லாம் அவள் என்னிடம், “ஏய் உமா, உன் சின்ன மகன் கார்த்திக் செய்வது ரொம்ப மோசம். என்னை “ரம்யா” என்று கூப்பிட்டு கூடவே, விக்னேஷை “அண்ணா” என்று கூப்பிடுகிறான், என்றாள்.

அது முடிந்து மறுநாள், பள்ளியில் சில பெற்றோர்கள் என்னிடம், “கார்த்திக் தன் அண்ணனை “அண்ணா” என்று அழைக்கும் பழக்கத்தைப் பாராட்டின்ர். “ஆஹா, நம் வளர்ப்பு!!” என்று என்னை நானே தட்டிக் கொடுக்க எண்ணிய போது, அப்பள்ளியில் பணிபுரியும் இராஜேஷ்வரி என்பவர், “நீங்க தான் உங்க பையனின் சமர்த்தை மெச்சிக் கொள்ளவேண்டும், “அண்ணா” என்று கூப்பிடுவது அழகாகத் தான் உள்ளது, அது என்ன, “டேய் அண்ணா, அது வேணும், டேய் அண்ணா, இது வேணும்,” என்றாறே பார்க்கவேண்டும். நான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று, ஓடி வ்ந்துவிட்டேன்.

Advertisements

சினிமா பார்த்து த(க)ண்ணீரில் நீந்தினோம்!!

என் பிள்ளைகளுக்கு பள்ளியில் காலாண்டு விடுமுறையாதலால், சில நாட்கள் மாலையில் நேரம் இருந்தால் ஏதாவது படம் பார்க்கும் வழக்கம் கொண்டோம்.  தொடர்ந்து இரு நாட்களாய், சில மனதைத் தொடும் படங்கள்.  நேற்று முன்தினம், “பூவெல்லாம் உன் வாசம்”, நேற்று “முகவரி”.  அஜித், ஜோதிகா இருவரையுமே எனக்கு பிடிக்கும்.  மேலும், கதையுடன் ஆழ்ந்து ஒன்றிவிடுவதால், நான் அடிக்கடி கதையில் சோகக் காட்சிகளின் போதெல்லாம், அழுதுகொண்டிருந்தேன்.  என் கணவரின் வழக்கமான கேலி கிண்டல்களுடன் என் அழுகை மேலும் கூடியது.  ஒரு கட்டத்தில், நான் தேற்ற முடியாத அளவிற்கு அழ, என் சிறிய மகன் என்னருகில் வந்து, “அம்மா, நீ அழுத கண்ணீரில், நாங்கள் அனைவரும், நீந்தி தான் இந்த அறையிலிருந்து படுக்கையறைக்கு செல்லவேண்டும்” என்றான், கூலாக…

குழந்தைகள் முன்பு அழக்கூடாதென்று, எவ்வளவு தான் கட்டுப்படுத்த நினைத்தாலும் சில திரைப்படங்களை பார்க்க அழுகை தானாக எட்டிப் பார்க்கிறது.

ஆஹா, இது ஒரு அளவில்லா ஆசை தான்!!

என் பிள்ளைகளுக்கு, தற்போது நவராத்திரி விடுமுறைகள் காலம்.  பள்ளிக்கு சென்று வரும் போதாவது, சற்று நேரம் களைப்பின் காரணமாய், அமைதி காப்பவர்கள், இப்பொழுதெல்லாம் மிகவும் வெறியுடனும், உற்சாகத்துடனும் 24 மணி நேரமும் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.  அப்போது தான் ஓர் யோசனை தோன்றியது.

திரைப்படங்களில் காட்டுவது போல். ஒரு பாடலின் தொடக்கத்தில், என் பிள்ளைகள் இருவரும், சிறு குழந்தைகளாய் இருக்க, அந்த பாடல் முடியும் தருவாயில், அதாவது, 10 அல்லது 15 நிமிடங்களில், பெரிய ஆண்மகளாய் ஆகிவிட வேண்டும்.  என்ன ஒரு அருமையான ஆசை!!!

Making up of this year’s Golu – “GOLU 2009”

Golu, is a South Indian Hindu festival, also known as Navarathri, or Durga Puja.  We keep the dolls in odd numbered steps arrangement.  The entire 5 step Golu was mainly arranged by his better half(best half!!) despite his hectic work schedule.  The whole of this month, he had been working late nights.  Last Friday, the day on which Navarathri started, that day too, it was 10 p.m. when he reached home.  Withstanding his tiredness, he had his dinner, and then took pains to arrange the dolls on the 5 steps.  This year, it was an all kids show.  Both Vignesh and Karthik, helped me in doing the theme for this year. The two kids, have been working for almost a fortnight. I had told them the theme was “Save our planet Earth” and said we might need to grow small plants etc.  We shopped for seeds, got, “Ulundhu, Thuvarai, Ragi, Payaru etc”, and kept them tied in a wet cloth for a day or two.  Once the seeds had sprouted, we had put them in various boxes, and by the time, Golu started, the plants have come to a decent height. Vignesh helped me in constructing fences for the park, using the ice-cream sticks that we had bought.  Karthik took responsibility of the cricket ground, wherein lot of Advertisement placards to mark the boundary of the ground, had to be made.  I am proud of both my kids.

As far as the theme goes, we had split the entire thing into three portions.  The first one was labelled Yesterday, where we had everything, fresh air to breathe, more greenery, healthy lifestyle, bullock carts, eco-friendly houses, and vehicles etc. We had kept two beautiful farms, and along with that a few houses, and other things.

The second part was today. Today has almost nothing. No water, so no grains, pollution of various kinds etc etc.  This was characterized by dying plants, heavy traffic in roads, wrong disposal of wastes and dusts.

The last part was tomorrow where we youth all would work together to have something in the environment during the future days.  This part was entirely done by my kids.  They have done various trees, built up a nice orchard with a park in the front and made fences for the entire block.

Apart from this, the kids made their father, buy them a cute cricket set of dolls, which they made a cricket ground and placed the players at appropriate places.  Karthik took the credit of making many advertisement hoardings for the cricket ground.

My husband had shot a few pictures of the Golu 2009. They can be viewed at

http://picasaweb.google.com/radhakrishnan.umamaheswari/Golu2009#

திருமணமான புதிதில் செய்த ரவா உப்புமா, சாரி ரவா கஞ்சி!!

அப்பொழுது தான் எனக்குத் திருமணமான புதிது.  சில நாட்களே ஆகியிருந்ததால், என் மாமியாரே, முக்கால்வாசி நேரம் சமையல் செய்தார்கள்.  அவர்கள் வீட்டில் தினமும், காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலை மீண்டும் ஏதேனும் ஒரு சிற்றுண்டி, இரவு  சாப்பாடு என்று செய்வர்.  ஒரு நாள் அதிகாலை, என் கணவரின் சித்தப்பா மதுரையிலிருந்து இரயிலில் வந்து இறங்கினார்.  என் மாமியாரிடம், “புது மருமகள் கைப் பக்குவம் எப்படி உள்ளது? எப்படி சமைக்கிறாள்?” என்று வினவினார். அவர்களும் பதிலுக்கு, “நன்றாகச் செய்கிறாள்” என்று கூறி, என்னிடம் “அனைவருக்கும் ஆகிறாற் போல், ரவா உப்புமா செய்துவிடு. ” என்றார். எனக்குத் தெரியும், வீட்டில் இட்லி/தோசை மாவு அன்று பார்த்து சதி செய்வது போல இல்லை என்று. திருமணத்திற்கு முன்பே, நான் என் பிறந்த வீட்டில், சமையலறையில், பல்வேறு வகைகள் செய்திருந்தாலும், ரவா உப்புமா செய்து பழகியிருக்கவில்லை.  என் பெரிய அத்தை, சமையல் கலையில் கைதேர்ந்த வல்லுனர்.  அவரிடம், எப்பொழுதோ ரவா உப்புமாவின் செய்முறையைக் கேட்ட பொழுது, “அதற்குப் பெயரே திடீர் உப்புமா, அல்லது நாதஸ்வரக் கலைஞர் உப்புமா, மிகவும் எளிது.” என்றார்.

என் போறாக் காலத்தை நினைத்து நொந்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை நறுக்கிக் கொண்டேன்.  வாணலியை கேஸில் வைத்து, பற்ற வைத்தேன்.  முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கி, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கியவற்றை எண்ணெயில் போட்டேன்.  பிறகு, வேண்டிய அளவு தண்ணீர் வைத்து, அது கொதித்தவுடன், சிறிது சிறிதாக ரவையை சேர்த்தேன். சற்று நேரம் அக்கலவையை அப்படியே வைத்திருந்தேன் எனில், உப்புமா ஒழுங்காக ஆகியிருக்கும்.  ஆனால், நான் ரவை சரியாக வெந்திருக்குமோ இல்லயோ என்று, மேலும் மேலும் தண்ணீர் சேர்த்தேன்.  அதிகம் தண்ணீர் சேர்த்ததால் ரவா உப்புமா, ரவா கஞ்சி! என்பது போல் வெளி வந்தது.  முதல் பலி என் சின்ன மாமனார்.  அவர் உண்டுவிட்டு, மிகவும் கஷ்டப்பட்டு, “நன்றாய் இருக்கு!” என்றார். அனைவரும் உண்ட பிறகு தான், நான் சாப்பிட அமர்ந்தேன். வாயில் வைக்க கொஞ்சம் சிரமமாய் இருந்த உப்புமாவை உண்ட அனைத்து மனிதர்களுக்கும் என் மனமார்ந்த வருத்தங்கள்!!!.

அதன் பிறகு, எப்பொழுது ரவா உப்புமா செய்தாலும், பழைய ஞாபகம் என்னை அச்சுறுத்தும்!!

Amma, I am feeling Jaangiri!!???

This incident happened when Vignesh was in his Pre-KG.  He was fortunate to have a great teacher in Ms. Parveen.  She was a lean, short figure.  My husband and myself, we used to think, “It is very tough to look at one child at home.  How do these teachers(especially the kindergarden teachers) take care of the entire lot of 30 or more kids?” . For Vignesh, joining school was a big blow.  Firstly, it was because that was the very first moment of time, that he was away from home, away from his known faces, and having to be for a few hours with same-aged kids, and a lonely teacher, whom he was seeing for the first time.  Secondly, I was at home, contrary to what he had seen earlier, when he had been at home.  I had my second baby Karthik, just a few days, after his school started off.  School began on June 12th 2002, and Karthik was born on 18th June 2002.  Everyday, I used to say him “Good bye!!” cheerfully, but he would keep a long face to leave me and go to school.

Almost till the end of the first term, a few children were found crying and not yet getting adjusted and Vignesh was one of them too.  May be, now I could attribute this to the fact that he was the smallest kid, in the whole class, apart from another kid, Sri Ranjani.  These two were just two and a half years, while most of his class friends were either 3 or 3+ upto three and a half.  There used to be another boy called Vishnu.  The teacher always used to say, “These two kids, Vignesh and Vishnu, always follow me wherever I go, catching hold of my saree pallu.”

Later, when the teacher started telling small stories to these kids in simple English, Vignesh, used to love narrating the same to us at home, the same evening.  One fine day, immediately when he entered home after school, he came straight to me, and said “My teacher has asked us to apply the newly learnt words, whenever we try to speak in English.  I am going to speak mostly in English at home.”  We all said, “He can speak so if his teacher had asked him to.  He said “Amma, I am feeling Jangiri.  We all were wondering what he was trying to tell, and again asked him.  He cooly said, “Amma, it has been a long time (romba neram aachu!!) since I ate my snacks in the school.  Please get me some food, I am really very jangiri.”  I told him that the word was not “Jangiri” but it was hungry.  But he argued with me saying that his teacher used that word, while narrating the story of “The Lion and the jackal”.  I asked him to tell the story and he started with, “One day, the king of the forest lion, was feeling very Jangiri”.  Only then, realised he mistook jangiri for hungry.  But he never bothered to listen.  Only, the next day, when I went to leave him in his school, I told the teacher about the incident.  It took her some minutes tomake Vignesh understand the difference between the words  jangiri and hungry.

Pre-KG Interview??(even my IAS interview was much easier…)

Today, when I look back to the day, when my husband and myself, along with my elder kid Vignesh, appeared for his Pre-KG admission interview, way back in January 2002, I am not able to control my laughter.  At that time, I was carrying my second kid, (I was 5-6 months pregnant) and was working as a Maths Lecturer with SRM Engineering College, Kattankalathur.   We were staying at Saidapet and my parents were at Tambaram Sanatorium, in my ancestral house.  Every morning, I used to come by taxi to my parent’s place along with Vignesh, who was barely two then, leave him with my mom, and then proceed to college.  In the evening, I would come back to my mom’s house, take Vignesh, and travel by suburban train to Saidapet back home.  I thought the school, Vel’s Vidyashram, located at Pallavaram, would be an ideal choice so that my parents’ would be able to drop and pick up Vignesh easily.  Also, the school opening time coincided with my delivery due date, adding more worries.  We had filled in the application form, and our interview date was mentioned some date in January.

At home, none of us used to converse specifically in English.  My mother used to put him a few English Rhymes CD while making him sleep in the baby rocker.  As the interview date was nearing, my husband, my in-laws all were trying to ask him few basic questions in English, like “What’s your name?”, “What’s your father’s/mother’s name”, “How old are you ?” etc.  He used to understand and answer those questions as well as identify colours etc.etc.,

On the interview day, we three started well before the scheduled time, and reached the school campus.  There were several similar parents who were waiting along with their boy/girl.  When Vignesh’s turn came, it was first the parents’ who were interviewed.  My husband faced questions like, “How do you balance between your work and family?”, “How do you plan to help you son with his studies??(He was joining just Pre-KG, not IIT/IIM etc) and things like that.  When the principal met me, her first question was “You have mentioned you are working. How can you spend time with your child, who needs you definitely during his formative years?” I immediately replied, “That was one of the reason I opted for teaching jobs, because, I can also be at home, when my kid is around.  Also, it is the quality of time, that I spent, rather than the quantity of time spent” This made her mum.  Finally, we were put in a room, where there were three or four teachers, sitting in different corners of the room, calling out for children individually.  When Vignesh’s turn arrived, he promptly went to her, wished her greetings, and sat on the chair.  A few initial questions were asked and from a distance itself, we could see that he was faring well.  Vignesh, being a calm, soft natured boy, his face itself used to reflect his moods.  The next question, he was just looking blank.  We wondered what could be that question.  The teacher was repeating “Jump! Vignesh Jump”.  He just didn’t know what to do, and was looking at the teacher.  Then she actioned and at the same time said “JUMP”.  He just followed her, and jumped.  At one instance, I was wondering what a fool I had been not to teach him basic english.  At the same time, I thought, English has become something which we cannot live without.  So, he will learn by himself.  But being in Tamil Nadu, and not English, is really a shame on my part.  Both my husband and myself didn’t want our kids to call us  “Mom /Dad” instead of அழகிய தமிழ் சொற்களான “அம்மா மற்றும் அப்பா”.

Still we used to tease Vignesh, as to he didn’t JUMP when he was asked to do so in the interview..

Today, we are proud that he is in Fifth Standard and his English levels are too good, thanks to his own interest, and the way he has been taught English.  Also, he has just recently bagged the First prize for the essay writing competition, titled, “My favourite Teacher”.