எனது தமிழ் நாவல்கள் படிக்கும் ஆர்வம் மீண்டும் துளிர் விட்டுள்ளது !!

கிட்டத் தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகி இருக்கும் நான் தமிழ் நாவல்கள் படித்து! பதினைந்து வயதில் தொடங்கி சுமார் ஏழெட்டு ஆண்டுகள் நான் தமிழ் மேல் கொண்ட காதலே பல அரிய நூல்களைப் படிக்கும் ஆவலைத் தூண்டியது.  தமிழ்ச்சுவையைப் பருகிய பலரும் கட்டாயம் படித்திருக்கக் கூடிய “பொன்னியின் செல்வன்” புத்தகத்தைப் படித்து அதில் வரும் கதாபாத்திரங்களின் தாக்கம் அப்பொழுது  நிறையவே இருந்தது. வந்தியத்தேவன் போன்ற வீரமும் கம்பீரமும் கொண்ட ஒருவர்  தான் என் கணவனாக வரப் போகிறார் என்ற நினைப்பே இனித்தது.  என் மனதில் துளிர்விட்ட வந்தியத்தேவன் 1998 நவம்பரில் நேரில் வந்ததும், நாட்கள் ஓடியதே தெரியாமல் மார்ச் 1999  எங்கள் திருமணம் இனிதே நிறைவேறியது .

பிறகு, இந்த பத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் இரு பிள்ளைகள் பெறுவதிலும், அவர்களை வளர்ப்பதிலும் (அம்மா, கண்டிப்பாக உன் துணையோடு தான்!!), சொந்த வீடு கட்டுவதிலும், வீடு வேலைகள் மற்றும், அலுவலக வேலைகள் என்று எனது துள்ளித் திரிந்த இளமைப் பருவம் மறந்தே போனது.  கடந்த சில தினங்களாகவே என் இரு குழந்தைகளையும் புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு ஆட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தீவிரமாய் கனன்று கொண்டிருந்தது.  அதன் பலனாய் எங்கள் இல்லத்திற்கு மிக அருகிலுள்ள நூலகத்தில் அங்கத்தினராய்ச் சேர்ந்தேன்.

முதல் நாள் ஒரு ரமணி சந்திரன் நாவலை ஆவலுடன் கொண்டு சென்றேன்.  அன்றிரவே அதை முடித்த சந்தோஷத்துடன் மறுநாள் இரண்டு நாவல்கள். ஒன்று ரமணி சந்திரன், மற்றொன்று வாஸந்தி.  நேற்று நான் கொண்டு சென்ற “உன்னிடம் மயங்குகிறேன்” என்ற வித்யா சுப்ரமணியம் எழுதிய நாவல் என்னை மிகவும் பாதித்தது.  இதுவரை திரைப்படங்களை மட்டுமே பார்த்து அழுது கொண்டிருந்த நான் இப்பொழுது நாவல்களைப் படித்தாலும் அழத் தொடங்கி இருக்கிறேன்.  அதன் கதாநாயகி அருணாவின் ஆழ்ந்த சிந்தனைகளும், பாச உணர்ச்சிகளும் நம்மை மெய் சிலிர்க்கவைக்கின்றது.

இந்த சில நாட்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது….நான் என்னையே மீண்டும் உயிர்பித்துள்ளேன்.

தொடரும் என் புத்தகப்  பயணங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s