ஆல்பெர்ட்டில் கந்தசாமி!

நேற்று ‌‌‌ ஞாயிற்றுக் கிழமையாதலால், எங்கள் வீட்டில் அனைவரும் எங்கு செல்லலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தோம்.  என் கணவர் “கந்தசாமி” திரைப்படம் வெளியானதிலிருந்தே அத்திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு கூறிக்கொண்டிருந்தார். நேற்று மீண்டும் கூறவே, மதிய உணவிற்குப் பிறகு, இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தோம். மாலை 6:30 மணி காட்சி. நான், என் கணவர், என் இரு பிள்ளைகள், விக்னேஷ் மற்றும் கார்த்திக், மற்றும் என் மாமியார், மாமனார், என மொத்தம் ஆறு பேர் மாலை 5:30 மணிக்கு ஆல்பெர்ட் தியேட்டருக்குக் காரில் கிளம்பினோம். என் பிள்ளைகள் இந்த தியேட்டரை இதற்கு முன் பார்த்ததில்லை.  இந்த தியேட்டர் காம்பிளக்ஸில் இரண்டு தியேட்டர்கள் உள்ளன – ஆல்பெர்ட் மற்றும் பேபி ஆல்பெர்ட்.  நாங்கள் அனைவரும் தியேட்டருக்குள் சென்று பால்கனி டிக்கெட் என்பதால், இரண்டாம் மாடிக்குப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தோம். முதல் மாடி முடிந்து மேலே ஏற எத்தனித்த போது, கார்த்திக்கின் கண்களில் பேபி ஆல்பெர்ட்- முதல் வகுப்பு  நுழைவாயில் என்ற அறிவிப்புப் பலகை தென்பட்டது.  உடனே அவன் அழுது கொண்டே, “அம்மா, நானும் அண்ணாவும் தனியாக பேபி ஆல்பெர்ட்டிலும், நீங்கள் நால்வரும் பெரியவர்கள் ஆல்பெர்ட்டிலும் படம் பார்க்க வேண்டுமா?” என்று வினவினான்.  பிறகு, அவனிடம், பேபி ஆல்பெர்ட் என்பது ஆல்பெர்ட் போலவே மற்றுமொரு தியேட்டர் என்று கூறி சமாதானம் செய்த பிறகு தான் எங்களுடன் இரண்டாம் மாடிக்கு வந்தான்.  குழந்தைகளின் கற்பனையே விசித்திரமானது தான்!!.

Advertisements

தமிழே அமுதே அழகே!!

இச் சம்பவம் என் மகன் விக்னேஷ் முதல் வகுப்பில் படிக்கும் பொழுது நடந்தது.  அவர்கள் பள்ளியில் முதலாம் வகுப்பிலிருந்து, இரண்டாவது மொழிப் பாடம் உண்டு. விக்னேஷ்க்கு நானும் என் கணவரும் தமிழ் மொழி தான்  தேர்வு செய்தோம். ஏனெனில் தமிழ் நாட்டிலிருந்துகொண்டு தமிழ் தெரியாதென்றால் மிகவும் கேவலம் என்று தோன்றியது.

நாங்கள் படித்துக்கொண்டிருந்த நாட்களில், தமிழ் மொழி நடத்துபவர்கள், “அகர முதல எழுத்தெல்லாம்..” என்பதற்கேற்ப, உயிர் எழுத்துக்கள் ” அ, ஆ, இ, ஈ,…” என்று தான் முதலில் தொடங்குவார்கள். ஆனால், இவர்கள் பள்ளியில், முதல் நாள், சொல்லிக் கொடுத்திருந்த எழுத்துக்கள், ” ட, ப, ம”, தொடர்ந்து “ட், ப், ம்”, அவற்றால் உண்டாகக் கூடிய சொற்களான “படம்”, “பாடம்”, “மடம்”, “மாடம்”, “பட்டம்”, “மட்டம்” போன்ற சொற்களாகும்.  அவர்கள் உயிர் எழுத்துக்கள் தொடங்கும் போது பள்ளி தொடங்கி 3 மாதங்கள் முழுவதுமாய் முடிந்திருந்தது.  மாணவர்களின் எளிய புரிந்து கொள்வதற்கெனவே இவ்வாறு நடத்துவதாய் தெரிவித்தனர்.

சில நாட்கள் கழிந்து விக்னேஷ் ஒரு நாள் என்னிடம் வந்து “அம்மா, இன்று தமிழாசிரியை சில சொற்கள் நடத்தினார்கள். தாத்தா, பாப்பா, காக்கா, மாமா என்று.   முதல் மூன்று சொற்களைப் போல ஏன் நாம் மாம்மா என்று எழுத மாட்டேங்கறோம், மாமா என்று எழுதுகிறோம்??” என்று வினவினான்.  எனக்கே அதற்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை.  நான் அவனிடம், “அதற்கான இலக்கண விதிகளை பின்னர் நீ படிப்பாய்” என்று கூறி முடித்தேன்.

Homework Horrors of a Class V student

My elder son Vignesh is in Class V in The PSBB Millennium School, Chennai and the younger one, Karthik is in the same school in Class II.  Generally, I prefer the two kids to do their homework by themselves, without getting the help of me or my husband.  Vignesh, especially loves doing Math homework, but finishes all his homework regularly.  Karthik, still a small kid, is more playful, forgets most of the time about his homework (at least that’s what he tells us!!).  I have to ask him a  hundred odd times, whether he has any homework to do or not.  This year, the subjects like Science and Social Studies have text books, that just touch upon various topics under the sun.  So, the kids have lots of homework of the explorative kind.  Last week, Vignesh had a Geography homework regarding “Facts about the Planet Earth”, for which we had to google out the answers.  Yesterday, there was a Science homework, which he remembered only around 9:30p.m. that too, when a friend of his, called Vignesh to clarify his doubts in that work.

That was the time, when the two kids generally switch off the T.V. and at least try to get into sleep.  Cursing the homework, Vignesh called me for help, as he couldn’t figure out the answers by himself.  A few sample questions from that worksheet:

1. Why do lions have eyes in the front of their heads?

2. Where are the  eyes of the deer placed in their face?

3. Why do lotus leaves float in the water?

4. Why do rare medicinal herbs grow only in mountains and not in plains?

I compared this with the type of homework that I used to have during my school days.   We were never pressurised with such kind of homework.

Along with Vignesh, I too dread the sight of homework, which takes hours of googling for the answers….

How I miss my College life!!!!!!

Way back in 1992, I joined S.D.N.B.Vaishnav College, Chromepet for a three year degree  course in Statistics.  The first two years, I was very sincere, not very playful, but I never used to top my class.  That made a big scar in my heart.  I vowed not to touch any of my academic related books during my Final year of the B.Sc. Statistics course.  I also told my parents about the same.  They kept quiet as they ever were regarding my studies.  I also joined a new gang, leaving behind my previous Padipps gang.  The new gang, had six members, Gayathri, Lakshmi, Srivi, Geetha, Sumathi and Poonam.  All of them were fun loving.  Both Gayathri and Lakshmi, to some extent, were  studious.  Srivi was more interested in Computers, and was already pursuing a course with NIIT.  She always dreamt about her software career.  The other three were not too attached about studies, but were of the mediocre type.  We all got together very well, and our gang got a name “Splendid Seven” among the students as well as the Staff members of our Department.  Ironically, that year, inspite of my reluctance to spend time on studying and preparing for my exams, I topped the class in all the subjects.

But, the way we enjoyed our final year still remains fresh in my heart.  Wherever an inter-college competition was announced, our team was there.  Be it Dumb charades, quiz, Sloka recitation, sports, pot pourri, we were there.  Our gang was well known among the Top dumb charades teams in the city.  We also had the honour of winning the Madras Round Table Dumb Charades competition wherein around 150 city teams participated.  There was a huge prize amount of Rs.10,000 for the winning team.  I still remember that day, when we carried the winning shield in the bus and the train that we travelled.  My mother made a small silver plate out of my share of money.

I really miss you all my dear friends.  Now, that all the seven of us are settled, with family and kids, we don’t even find time to speak to each other over phone or otherwise.

Those days were really carefree and wonderful……….

எனது தமிழ் நாவல்கள் படிக்கும் ஆர்வம் மீண்டும் துளிர் விட்டுள்ளது !!

கிட்டத் தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகி இருக்கும் நான் தமிழ் நாவல்கள் படித்து! பதினைந்து வயதில் தொடங்கி சுமார் ஏழெட்டு ஆண்டுகள் நான் தமிழ் மேல் கொண்ட காதலே பல அரிய நூல்களைப் படிக்கும் ஆவலைத் தூண்டியது.  தமிழ்ச்சுவையைப் பருகிய பலரும் கட்டாயம் படித்திருக்கக் கூடிய “பொன்னியின் செல்வன்” புத்தகத்தைப் படித்து அதில் வரும் கதாபாத்திரங்களின் தாக்கம் அப்பொழுது  நிறையவே இருந்தது. வந்தியத்தேவன் போன்ற வீரமும் கம்பீரமும் கொண்ட ஒருவர்  தான் என் கணவனாக வரப் போகிறார் என்ற நினைப்பே இனித்தது.  என் மனதில் துளிர்விட்ட வந்தியத்தேவன் 1998 நவம்பரில் நேரில் வந்ததும், நாட்கள் ஓடியதே தெரியாமல் மார்ச் 1999  எங்கள் திருமணம் இனிதே நிறைவேறியது .

பிறகு, இந்த பத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் இரு பிள்ளைகள் பெறுவதிலும், அவர்களை வளர்ப்பதிலும் (அம்மா, கண்டிப்பாக உன் துணையோடு தான்!!), சொந்த வீடு கட்டுவதிலும், வீடு வேலைகள் மற்றும், அலுவலக வேலைகள் என்று எனது துள்ளித் திரிந்த இளமைப் பருவம் மறந்தே போனது.  கடந்த சில தினங்களாகவே என் இரு குழந்தைகளையும் புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு ஆட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தீவிரமாய் கனன்று கொண்டிருந்தது.  அதன் பலனாய் எங்கள் இல்லத்திற்கு மிக அருகிலுள்ள நூலகத்தில் அங்கத்தினராய்ச் சேர்ந்தேன்.

முதல் நாள் ஒரு ரமணி சந்திரன் நாவலை ஆவலுடன் கொண்டு சென்றேன்.  அன்றிரவே அதை முடித்த சந்தோஷத்துடன் மறுநாள் இரண்டு நாவல்கள். ஒன்று ரமணி சந்திரன், மற்றொன்று வாஸந்தி.  நேற்று நான் கொண்டு சென்ற “உன்னிடம் மயங்குகிறேன்” என்ற வித்யா சுப்ரமணியம் எழுதிய நாவல் என்னை மிகவும் பாதித்தது.  இதுவரை திரைப்படங்களை மட்டுமே பார்த்து அழுது கொண்டிருந்த நான் இப்பொழுது நாவல்களைப் படித்தாலும் அழத் தொடங்கி இருக்கிறேன்.  அதன் கதாநாயகி அருணாவின் ஆழ்ந்த சிந்தனைகளும், பாச உணர்ச்சிகளும் நம்மை மெய் சிலிர்க்கவைக்கின்றது.

இந்த சில நாட்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது….நான் என்னையே மீண்டும் உயிர்பித்துள்ளேன்.

தொடரும் என் புத்தகப்  பயணங்கள்.